search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள் பலி"

    ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை அருகே ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். #AfghanistanBlast #PulECharkhiPrison
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், காபூல் நகரில் உள்ள புல்-இ-சார்க்கி சிறைச்சாலை ஊழியர்கள் இன்று காலை பணிக்கு வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வந்த வாகனம் காலை 7.30 மணியளவில் சிறைச்சாலையின் பிரதான வாயிலை நெருங்கியபோது, திடீரென அந்த வாகனத்தை நோக்கி வந்த ஒரு பயங்கரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.



    இதில், சிறைச்சாலை வாகனம் கடுமையாக சேதம் அடைந்தது. வாகனத்தினுள் இருந்த 7 ஊழியர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    சிறைச்சாலை வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #AfghanistanBlast #PulECharkhiPrison
    ஓசூர் அருகே பேட்டரி தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வி‌ஷவாயு தாக்கி 2 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் சிச்ருகானபள்ளியில் பேட்டரி தயாரிக்கும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது.

    இந்த கம்பெனியில் கழிவுநீரை சுத்திகரிக்க மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் டேங்க் ஒன்றை அமைத்து பேட்டரி தயாரிக்க பயன்படுத்தும் ரசாயன கழிவுநீர் தேக்கி வைக்கப்படுகிறது. அதனை ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் அகற்றி சுத்தப்படுத்துவது வழக்கம்.

    நேற்று இரவு பாகலூர் அருகே உள்ள கொத்தபள்ளியை சேர்ந்த நாகேஷ் (வயது 25) என்பவர் சுத்திகரிப்பு மையத்திற்கு சென்று பராமரிப்பு பணியை செய்தார்.

    அப்போது அங்கு இருந்த கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்தார். உடனே அதில் இருந்து வி‌ஷவாயு கசிந்ததால் நாகேஷ் மயங்கி அங்கேயே கீழே விழுந்தார். இதனை கண்ட பாகலூரை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் நாகேஷின் உடல் அருகே ஓடிவந்தார். அப்போது மஞ்சுநாத்தும் வி‌ஷவாயு தாக்கி மயங்கி கீழே விழுந்தார். இதில் சிறிது நேரத்தில் 2 பேரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    இதுகுறித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் ஓசூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியை பாதுகாப்பான முறையில் மூடிவிட்டு நாகேஷ், மஞ்சுநாத் உடலை மீட்டனர்.

    நாகேஷ், மஞ்சுநாத் ஆகிய 2 பேரும் வி‌ஷவாயு தாங்கி இறந்த சம்பவம் அவர்களது உறவினர்களுக்கும், பாகலூர் போலீசாருக்கும் தெரியவந்ததும் உடனே கம்பெனியில் திரண்டனர். அப்போது போலீசார் உடல்களை மீட்க முயற்சித்தனர்.

    உடனே உறவினர்கள் 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க மறுத்து போலீசாரை முற்றுகையிட்டனர். இறந்தவர்களின் 2 பேரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கினால் தான் உடல்களை போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று போராட்டம் நடத்தினர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. உடனே அங்கு விரைந்து வந்த ஓசூர் டி.எஸ்.பி. மீனாட்சி, தாசில்தார் முத்துபாண்டி உள்பட அதிகாரிகள் முற்றுகையிட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். #Tamilnews
    ×